Please Subscribe to Our Whatsapp Channel in the link below
https://whatsapp.com/channel/0029VaN3FQEGk1G03oHMRc2a
Please Visit and Subscribe to our YouTube Channel through the link below
https://www.youtube.com/channel/UC6y0CgFoJ47J754dDZbzL6w
இணை சொல்ல முடியாத எழில் ஓவியம்
அருமை மகள் அபிராமி (1959)
பாடல் : கு.சா. கிருஷ்ண மூர்த்தி
இசை : வி. தட்ஷணாமூர்த்தி
பாடியவர் : சீர்காழி கோவிந்தராஜன்
Inai Solla Mudiyaadha Yezhil Oviyam
Arumai Magal Abiraami (1959)
Lyrics - Ku. Sa. Krishnamoorthi
Music - V. Dakshinamoorthy
Singer - Sirkazhi Govindarajan
இனை சொல்ல முடியாத எழில் ஓவியம்!
இன்பக் கனவெல்லாம் நினைவாக்கும் கலைக்காவியம்!
கனைப்போன்ற விழியும் செங்கனிப் போன்ற மொழியும்!
கற்பனைக் கண்கானில் கவி மாரி பொழியும்!
புது மலர்த்தேன் அகரமதன் அதன் சுவை பெருகும்
இதழ் அமுதம் தனைபருகும்!
இதயமுடன் நாடிவரும் வண்டு தரும் இசையினிலே தனை மறந்து மகிழும் இவை!
இனை சொல்லமுடியாத எழில் ஓவியம்!
மின்னலை குழம்பாக்கி வார்த்தெடுத்த வடிவம்!
வில்லை இரு கூறாக்கி வணைந்த செம்புருவம்!
விண்ணில் தவழும் முழுமதி போல் முக உருவம்!
மதன் வித்தையெல்லாம் பித்தரைமேல் சித்தரிக்கும் பருவம்!
பண்பு சேர் அன்புடன் பழகுவதில் எங்குமே இன்பமே பொங்குமே!
என் மனச் சோலையிலே உரிமையுடன் தன்வசம் ஆக்கியே கனிவுடன் நிறைந்தேன், வளைந்தேன்,
சுழன்றேன், திறமையுடன், நடனமிடும் வனிதை இவள் அழகிலே இனிமைமிகு, இசையிலே பழகுதமிழ், கலையிலே புரித நிலை, இனை சொல்ல முடியாத எழில் ஓவியம், இனை சொல்ல முடியாத எழில் ஓவியம்!